Wednesday , 2 July 2025

மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் – பிரதமர்

தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு தொடர்பான போட்டி இல்லாத போதிலும், மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொத்தட்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் அருமை புரியாதவர்களே கடந்த காலங்களில் அதனைக் குறைத்து மதிப்பிட்டுவந்தனர், நாடாளுமன்றத்துக்கு எவரும் பலவந்தமாகச் செல்லவில்லை, நாடாளுமன்றத்துக்குச் செல்லும் ஊழல்வாதிகளை மக்களே புள்ளடியிட்டு அனுப்புகின்றனர்.

நாம் விருப்பு வாக்கு முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என எமது எதிர் தரப்பினர் கூறி வருகின்றனர், எமது கட்சி வேட்பாளர்களிடையே, போட்டித்தன்மை இல்லாதமையினால், நாம் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

எனினும், விருப்பு வாக்கு அடிப்படையில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சியையும் விரும்பும் வேட்பாளரையும் தெரிவுசெய்ய வேண்டும்.

இதேவேளை, அதிகரித்துள்ள பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தேசிய மக்கள் சக்தியில் இன்று அதிகளவான பெண்கள் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது நாட்டை சுத்தப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, ஊழலைத் துடைத்தெறிந்து சுத்தப்படுத்துவதற்குப் பெண்களின் வகிபாகமும் மிகவும் அவசியமானது எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …