Sunday , 6 July 2025

பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் தீப்பரவல்!

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரியுண்டுள்ளது.

நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது.

இந்த தீப்பரவலை கொழும்பு துறைமுக தீயணைப்புத்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலே தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …