ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மற்றும் ஜப்பானின் ஐ.எம் நிறுவனத்தின் தலைவர் சுனமோரி ஹிதோஷி ஆகியோருக்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜப்பானில் தாதியர் தொழில்துறைக்காக அதிகளவான தொழில் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அதற்கான பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏராளமான தொழில் வாய்ப்புக்களை இலங்கையர்களுக்காக வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானின் ஐ.எம் நிறுவனத் தலைவர் கனமோரி ஹிதோஷி குறிப்பிட்டுள்ளார்.