நீர்கொழும்பு – பிட்டிபன பகுதியில் 82 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பின், பிட்டிபன பகுதியிலும் கொழும்பின் வாழைத்தோட்டம் பகுதியிலும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது சுமார் 205 கிலோ 958 கிராம் கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற ஒரு பாரவூர்தி மற்றும் ஒரு மகிழுந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக துன்கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.