ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் – மோடி

ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறையினர் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார். 2014ம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வரும் முன்பு அமலாக்கத்துறை சிறிய பொருளாதார குற்றவழக்குகளை விசாரித்து வந்ததாக தெரிவித்த மோடி, முந்தைய ஆட்சிகளில் மொத்தம்1800 வழக்குகள் மட்டும் பதிவானதையும் 5 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் 4700 வழக்குகள் பதிவானதையும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாத நிதித்திரட்டல், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் பெரிய அளவிலான குற்றங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

இதற்காக எதிர்க்கட்சியினர் தம்மீது விமர்சனங்களை கூறி வருவதாக சாடிய மோடி, மக்கள் அவர்களை ஏற்கமாட்டார்கள் என்றார். தேர்தல் நேரத்தில் வெறும் தாளில் கால்குலேட்டர் வைத்து கனவுகளை பின்னுகிற எதிர்க்கட்சிகளை நிராகரிக்குமாறு கூறிய மோடி, தாம் கனவுகளைத் தாண்டிச் சென்று கியாரண்டி அளித்துவருவதாக தெரிவித்தார்.

Check Also

கடவுச்சீட்டை பெறுவதற்கான திகதி- நேரத்தை முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமுலாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள …