சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய நபர் கைது!

மணலாறு பகுதியில் சிறுவன் ஒருவர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் காணொளியுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் உணவு உட்கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவரை நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் மீது தாக்குதல் நடத்திய ஆண் உட்பட மூன்று பேர் புல்மோட்டை – அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணலாறு காவல்துறையினர் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் மற்றும் முல்லைத்தீவு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது குறித்த சிறுவனைத் தாக்கிய குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி 45 வயதான பிரதான சந்தேகநபரும், 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தாக்குதலுக்கு இலக்கான 4 வயதான சிறுவன் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மணலாறு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …