தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தனது கட்சி சார்ந்த செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல் தொடங்குவது என்பது பெரிய விஷயம். இப்போதைக்கு ‘தமிழ் ஒளி’ என்று தனது சேனலுக்கு தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பெயரில் சேனல் உருவாகுமா அல்லது வேறு பெயரில் தொடங்குவார்களா என்பது வரும் காலத்தில் தெரிய வரும் என விஜய் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.