இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்துள்ளார்
வார்னே -முரளிதரன் கிண்ணத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலியில் நேற்று (29) தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் துடுப்பாட்டத்தை தேர்வு செயதார்.
தற்போது, அவுஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை 475 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
சுவாஜா 204, இங்கிலீஷ் 44 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறார்கள்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவரும் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.
298 பந்துகளில் 204 ஓட்டங்கள் எடுத்துச் சிறப்பாக விளையாடி வருகிறார் கவாஜா,
அவுஸ்திரேலிய அணி 114 ஓவர் முடிவில் 475/3 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பார்டர் -கவாஸ்கர் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக பும்ராவிடம் ஆட்டமிழந்த கவாஜா இலங்கைத் தொடரில் மிகவும் அசத்தலாக விளையாடி வருகிறார்
இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுடன் 195* ஓட்டங்கள் அடித்ததே கவாஜாவின் அதிகபட்ச டெஸ்ட் ஓட்டங்களாக இருந்தது