போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை!

Spread the love

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடுமுழுவதும் உள்ள 607 காவல் நிலையங்களில் உள்ள காவல்துறையினரால் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்தின் கீழ் 3,876 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றத்தில் 190 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.