அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஜோஸ் பட்லர்!

அபிஷேக் சர்மா
Spread the love

அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஜோஸ் பட்லர்!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது.

குறித்த போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4 – 1 எனும் அடிப்படையில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில் இருபதுக்கு 20 தொடரை இழந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் “தற்போது இருபதுக்கு 20 போட்டிகளில் மிகச்சிறந்த அணியாக இந்தியா திகழ்கிறது. அதிலும் நான் பார்த்து வியந்த மிகச்சிறந்த துடுப்பாட்டம் அபிஷேக் சர்மாவுடையதுதான்.

எங்கள் அணியில் இளம் வீரர்களுக்கு இந்த தொடர் சிறந்த அனுபவமாக இருக்கும்.” என ஜோஸ் பட்லர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இடைநிறுத்தப்பட்டிருந்த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் !