Friday , 25 April 2025

ட்ரம்ப்பின் வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

Spread the love

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நாடுகளை எச்சரிக்கும் வகையில் அறிக்கையொன்றை சீனா வெளியிட்டுள்ளது.

இறக்குமதி வரிக்கு விலக்கு அளிப்பதற்கு ஈடாக சீனாவுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள்மீது அழுத்தம் கொடுப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு பதிலளிக்கும் விதமாக சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் உலக நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இதன்படி, ஜப்பானிய தூதுக்குழு கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்றதுடன் தென்கொரியா இந்த வாரம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தநிலையில், வரி விலக்குக்காக சமாதானப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக அமைதியை கொண்டு வர முடியாது என சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் நலன்களை பணயம் வைத்து எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் உறுதியாக எதிர்ப்பதாகவும் சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது – நளிந்த ஜயதிஸ்ஸ !

Spread the loveஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. …