Thursday , 3 July 2025

இதுவரை 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம்

இதுவரை 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில், இன்றைய தினம் (29) வரையான காலப்பகுதியில் 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து நீலநிற பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வு பணிகளின் போது மேலும் , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் வரையில் 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 மனித எலும்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Check Also

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள்.   தேசிய மக்கள் சக்தி – 5,553 வாக்குகள் …