தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு செய்திகள்

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி

மக்களவை

தமிழ்நாட்டில் தான் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன் இனி முழு நேர அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி; புதுச்சேரியில் போட்டியிடவில்லை: தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது: தமிழிசை ஆளுநர் பதவியில் எந்த ஒரு அழுத்தமும் கிடையாது; முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன்: தமிழிசை ஆளுநர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்த நிலையில் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை -நாமல்

Read More »

போக்சோ வழக்கை சட்டப்படி சந்திப்பேன்… – எடியூரப்பா

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூருவில் பேட்டியளித்த அவர், ஒரு மாதத்திற்கு முன் தனது வீட்டு வாசலுக்கு வந்த பெண் ஒருவர் காவல் துறையால் தனக்கு அநீதி நடந்ததாக தம்மிடம் முறையிட்டதாக கூறினார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அப்பெண் திடீரென தம்மீதே குற்றம்சாட்டியதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று எண்ணி காவல்துறை ஆணையரிடம் அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்தார். உதவி செய்தால் உபத்திரவமாக முடிவதை என்னவென்று …

Read More »

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிக்கும் தி.மு.க – அண்ணாமலை

அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜ, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த மீஞ்சூர் சலீம்-ஐ பெங்களூரு விமான நிலையம் வரைச் சென்று தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். …

Read More »

மோடி தலைமையில் 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் – நிர்மலா சீதாராமன்

பெண்கள் ராக்கெட்டே விட்டாலும், அவள் பெண் தானே என கருதப்பட்ட நிலையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் மாற்றியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். திருச்சியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். எதற்கெடுத்தாலும் சீனாவைப் பாருங்கள் என்று பேசுவது நடைமுறைக்கு ஒத்துவராது எனக் கூறியுள்ள நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையில் 2047க்குள் இந்தியாவும் வளர்ந்த நாடாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

Read More »

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

திமுக

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு போக, தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை அக்கட்சியின் தலைமை விரைவில் அறிவிக்க வாய்ப்பு

Read More »

இன்று மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்

மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடெங்கும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்! சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை …

Read More »

அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர மாட்டோம்

செல்வபெருந்தகை

எங்களது உயரம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், அது திமுகவுக்கும் தெரியும், நிச்சயமாக திமுக கூட்டணியில் தான் இருப்போம் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற 3 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், தி.மு.கவைவிட அதிக இடங்களை ஒதுக்கினாலும் கூட அ.தி.மு.கவுடன் கூட்டணி சேரமாட்டோம் எனவும், போன வேகத்தில் விஜயதரணி மீண்டும் காங்கிரஸிற்கே திரும்பி வருவார் எனவும் தெரிவித்தார். இன்றைய ராசிப்பலன் – 08.03.2024 விமான சேவையை நிறுத்துவதாக ஏர்-பிரான்ஸ் அறிவிப்பு

Read More »

உடனே அரசாணை வெளியிடனும் – சீமான்

சீமான்

மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் கடைக்கு லீவு துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கிறித்துவப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் …

Read More »

திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்

சீமான்

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக ஏன் தமிழை வழக்காடு மொழியாக மாற்றவில்லை என கேள்வி எழுப்பினார். இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்

Read More »

இளைஞர்களை நம்பியே நாட்டின் எதிர்காலம்: மத்திய அமைச்சர்

மக்கள் தொகையில் 63 சதவீதமுள்ள இளைஞர்களை நம்பி தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர், கல்வி நிறுவனங்களும் தொழிலகங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Read More »