முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

SpaceX இன் Starlink இணைய சேவை

செயற்கைக்கோள் இணைய சேவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்ததை அடுத்து SpaceX இன் ஸ்டார்லிங்க் இலங்கையில் நிறுவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையத்தை வார இறுதியில் தொடங்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களில் திட்டத்தை அறிவித்தார் மற்றும் இலங்கையில் Starlink இன் சாத்தியக்கூறுகள் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கியுள்ளார். மேலும் இரண்டு வார பொது ஆலோசனைக் காலத்தின் பின்னர் Starlink இணையம் இலங்கையில் தொடங்கப்படலாம் எனவும் கூறியுள்ளார்.

Read More »

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயம் தென்கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதால் அங்கு பதற்றம் நீட்டித்துள்ளது. மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் நேற்று (10) காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ரேடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள …

Read More »

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா?

ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா? ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை. முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கருத்துரைத்திருந்தார். எனினும், இந்த கருத்து சொந்த கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சி தரப்பிலும் கடும் விமர்சனங்களை …

Read More »

இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது. நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் …

Read More »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்கள் நீடித்தால்……. பா.உ சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால்……. பா.உ சி.வி.விக்னேஸ்வரன் தற்போதைய அதிபர்  முறை மாற்றப்பட்டால் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்பொழுது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.

Read More »

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு விருது

உலக சுகாதார ஸ்தாபனத்தினால்  (WHO) வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலக புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது. விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று (07) நடைபெற்ற உலக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்விலேயே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.

Read More »

போதைப்பொருள் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த இரண்டு மாணவர்கள்  பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் இருவரும் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் ஆறு வயது மாணவனும், ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு வயது மாணவனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வரும் போது போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இருபத்தொரு வயதுடைய இளைஞன் ஒருவர் …

Read More »

விடுதலை புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள்  நேற்று (7) இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2 இலத்திரனியல் ஸ்கானர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக …

Read More »

1700 ரூபாய் சம்பளத்தை இந்த மாதம் வழங்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சுற்று நிருபங்கள் தங்களுக்கு கிடைக்காத காரணத்தினால், அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 1700 ரூபாய் சம்பளத்தை இந்த மாதம் வழங்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.

Read More »

நாளை கொழும்பு கண்டி பிரதான தற்காலிகமாக மூடப்படும் வீதி

நாளை காலை 10:30 முதல் மாலை 6:30 வரை கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடுக்கண்ணாவ பகுதி தற்காலிகமாக மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கற்பாறையில் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அதனை அகற்றுவதற்கும், முறிந்து விடும் அபாயத்தில் இருக்கும் பாரிய மரங்களை அகற்றுவதற்குமே குறித்த வீதி மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »