எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Read More »உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு: சாதனைப் படைத்த யாழ் இளைஞன்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(31) வெளியாகின. வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ் மாவட்ட மட்டத்தில் மதியழகன் டினோஜன் என்ற மாணவன் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மதியழகன் டினோஜன் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.
Read More »கத்தாரில் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வயது 3 ஆக குறைப்பு!
3 வயதில் மழலையர் பள்ளி வகுப்புகளில் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான யோசனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024.05.22ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி வகுப்புகளில் (kindergarten) இதுவரை காலமும் மாணவர்கள் 4 வயதில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். என்றாலும் இந்த வயதெல்லையை 4யிலிருந்து 3 ஆக குறைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தலைமையிலான அமைச்சரவையின் வழக்கமான கூட்டத்திற்கு அமிரி திவானில் 2024.05.22 அன்று …
Read More »கத்தாரில் அதிகரிக்கும் வெப்பம், நாளை 45 டிகிரி வரை உயரும்
கத்தாரில் நாளை, மே 22, பகலில் வெப்பம் முதல் மிக வெப்பமாக இருக்கும், சில நேரங்களில் சிதறிய மேகங்கள் மற்றும் சில நேரங்களில் லேசான தூசியுடன் இருக்கும் என்று கத்தார் வானிலை ஆய்வுத் துறை (QMD) தெரிவித்துள்ளது. அபு சம்ரா பகுதியில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். தோஹாவில் நாளை வெப்பநிலை 31°C முதல் 41°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக QMD மேலும் தெரிவித்துள்ளது. QMD சமீபத்தில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை இந்த வாரம் 45 ° C …
Read More »பஸ் மோதி மாணவி பலி
கம்பளை பொலிஸ் வலயத்துக்குட்பட்ட பகுதியில் பஸ் மோதி பாடசாலை மாணவியொருவர் பலியானியுள்ளார். இன்று காலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் வைத்து மாணவிமீது மோதியுள்ளது. படுகாயமடைந்த தரம் ஐந்தில் கல்வி பயிலும் ஹன்சமாளி என்ற 10 வயது மாணவியொருவரே, குருந்துவந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அன்று காலை பஸ்ஸில் இருந்து இறங்கி, பாசாலைக்கு செல்லும்வழயிலேயே பஸ் மோதியுள்ளது. மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கருந்துவந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Read More »பஸ் மோதி வயோதிப பெண் பலி
கம்பளை, எக்கால நகரில் இன்று மதியம் பஸ்மோதி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நகரில் இருந்து உலப்பனைவரை பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் மோதியே 70 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் எக்கால பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Read More »யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போராட்டம்
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனனாயக ஊழியர் சங்கத்தினரால் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் இன்று கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், எம்.சி.ஏ கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு பிள்ளையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காட்சிப்படுத்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More »இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்றுப் பரவல்!
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 324 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த தொற்றுப் பரவலினால் அச்சமோ, பதற்றமோ கொள்ளத் தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது என்றும் இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், பொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இந்திய சுகாதாரத்துறை பொதுமக்களை …
Read More »ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்!
ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். தூதரகத்திற்குச் சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம் வரவேற்றது. ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்து ஈரான் தூதுவர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பைப் பதிவிட்ட பின்னர், …
Read More »இளம் குடும்பப் பெண்ணின் உயிரிழப்பில் மர்மம் – தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் – தாவடி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – தாவடி தெற்கு, காளி கோவில் வீதியில் வசிக்கும் 31 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவரும், மகளும் பிரான்சில் வசிப்பதாகவும் குறித்த பெண் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் திகதி இரவு உணவருந்தி விட்டு உறங்கச் சென்றிருந்த நிலையில் மறுநாள் அவர் எழுந்திருக்கவில்லை என காவல்துறையினரின் …
Read More »