தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரோடு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன். திமுக பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும்போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும்போது தான் உண்மையாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக …
Read More »மக்களால் தீர்மானிக்கப்படும் நாட்டின் எதிர்காலம் – பிரதமர்!
மக்களின் எதிர்பார்ப்புகளுடன் இணைந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புவக்பிட்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி மக்களால் தீர்மானிக்கப்படும். இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் தேவையான மாற்றங்களை முறையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதியாகச் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மக்களிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை மூலம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. எங்களிடம் நிறைவேற்று அதிகாரம் மாத்திரமே …
Read More »டிரம்ப்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை’ – மிச்சேல் ஒபாமா
டிரம்ப்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை’ – மிச்சேல் ஒபாமா மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமலா ஹாரிசை ஆதரித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை மிச்சேல் ஒபாமா முன்வைத்தார். தனது பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;- “இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஏன் இன்னும் கணிசமான அளவில் ஆதரவு கிடைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. வேட்பாளர்கள் அனைத்து தகுதிகளையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு வாக்காளர்களுக்கு அனைத்து …
Read More »ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி
ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி ரஷியாவின் கிரோவ் மாகாணத்தில் இருந்து எம்.ஐ-2 என்ற ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. இதில் டாக்டர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர். பெலீங்கி என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதில் இருந்த 4 பேரும் உடல் சிதறி பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து …
Read More »விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா
விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உரையாற்றினார். கட்சியின் கொள்கைகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். …
Read More »மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் – பிரதமர்
தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு தொடர்பான போட்டி இல்லாத போதிலும், மக்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொத்தட்டுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் அருமை புரியாதவர்களே கடந்த காலங்களில் அதனைக் குறைத்து மதிப்பிட்டுவந்தனர், நாடாளுமன்றத்துக்கு எவரும் பலவந்தமாகச் செல்லவில்லை, நாடாளுமன்றத்துக்குச் செல்லும் ஊழல்வாதிகளை மக்களே புள்ளடியிட்டு அனுப்புகின்றனர். நாம் விருப்பு வாக்கு முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என எமது எதிர் தரப்பினர் கூறி …
Read More »ஆரம்பமானது விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. கட்சியின் முதல் மாநாடு என்பதால் விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். …
Read More »மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் – ஜனாதிபதி
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் – ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும். அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும். மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 27.10.2024 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 27.10.2024 | Sri Lanka Tamil News
Read More »பிலிப்பைன்சில் கனமழை – 81 பேர் பலி
பிலிப்பைன்சில் கனமழை – 81 பேர் பலி பிலிப்பைன்சில் உருவான டிராமி புயல் அந்நாட்டின் பல மாகாணங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக அந்நாட்டின் இசபெலா, இபுகாவோ, படாகஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் காரணமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், பிலிப்பைன்சில் வீசிய புயலால் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் …
Read More »