ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி

ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி

ரஷியாவின் கிரோவ் மாகாணத்தில் இருந்து எம்.ஐ-2 என்ற ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. இதில் டாக்டர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர்.

பெலீங்கி என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதில் இருந்த 4 பேரும் உடல் சிதறி பலியாகினர்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி

Check Also

புதிய ஜனாதிபதி

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொல்ல சதி திட்டம்

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொல்ல சதி திட்டம் அமெரிக்கா: புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை கொல்ல முயற்சி …