மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயம்

0
4

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயம்

தென்கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதால் அங்கு பதற்றம் நீட்டித்துள்ளது.

மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் நேற்று (10) காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ரேடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.