மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட விஜய்

மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட விஜய்

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க கட்சியின் தலைவர் விஜய் இன்று மதியம் சென்னையில் இருந்து மாநாட்டு திடலுக்கு வருகை தருவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் திடீரென விஜய் நேற்று மாலை 6 மணிக்கு மாநாட்டு திடலுக்கு காரில் வருகை தந்தார். தொடர்ந்து, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கேரவனில் அவர் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர், இரவு 9 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வந்த அவர், அங்கு செய்யப்பட்டு இருந்த பணிகளை பார்வையிட்டார்.

சுமார் 30 நிமிடம் ஆய்வு செய்த அவர், பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அறைக்கு சென்று, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த உள்பட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலேசானை நடத்தினார்.

இன்று சென்னையில் இருந்து காரில் வருவதாக இருந்தால் போக்குவரத்து இடர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநாட்டு திடலுக்கு வருகை தருவதற்கு காலவிரயம் ஆகலாம்.

இதை தவிர்க்கவே முன்கூட்டியே விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்ததாக தகவல்கள் வெளியானது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்!

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்