Saturday , 11 October 2025

பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்களுக்கு தடை!

இந்தியத் துறைமுகங்களுக்குள் பாகிஸ்தான் கொடியை ஏந்திய கப்பல்கள் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதேவேளை, இந்தியக் கொடியை ஏந்திய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைப்பதற்கும் இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அதேவேளை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவத்தை்யடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் …