Sunday , 6 July 2025

மக்களால் தீர்மானிக்கப்படும் நாட்டின் எதிர்காலம் – பிரதமர்!

மக்களின் எதிர்பார்ப்புகளுடன் இணைந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புவக்பிட்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி மக்களால் தீர்மானிக்கப்படும்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் தேவையான மாற்றங்களை முறையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதியாகச் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மக்களிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை மூலம் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

எங்களிடம் நிறைவேற்று அதிகாரம் மாத்திரமே உள்ளது, அதனைக் கொண்டு உலகின் மிகச் சிறிய அமைச்சரவையை நாம் கொண்டு நடத்துகிறோம்.

நிறைவேற்று அதிகாரத்தைச் சுத்தப்படுத்தி ஜனநாயக சக்தியாக மாற்றுவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …