மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் நிறையை குறைப்பதற்கு பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ள தரமான பாடசாலை பையின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புத்தகங்கள் அடங்கிய அதிக நிறையுடைய பாடசாலை பைகளை சுமப்பதினால் மாணவர்கள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் எமது செய்தி சேவை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ள வைத்தியர் கபில ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 60 வீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் கையாள முடியாத அளவு புத்தகப் பையை எடுத்துச் செல்கின்றமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களை நம்பியே நாட்டின் எதிர்காலம்: மத்திய அமைச்சர்

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …