இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி குலொயா ஷியின்பனு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தியின்போது மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் இடம் குலொயா உறுதி அளித்தார்.
மேலும், உடனடியாக மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி குலொயா உறுதி அளித்தார்.
இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை தடுத்து நிறுத்துவது, போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக டிரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி உத்தரவாதம் அளித்தார்.
இதனை தொடர்ந்து மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு ஒரு மாதம் அமலில் இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இடைநிறுத்தப்பட்டிருந்த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் !
@tamilaruvitv24 USA customs is delayed by 30 days