தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாத்திரம் செயற்பட்டால் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் மிகுதியாகும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹரக பகுதியில் சனிக்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொணடு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்தோம்.பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வகிக்கிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் …
Read More »யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது
யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 73 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 23 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More »வட்டுக்கோட்டை வாள்வெட்டு – ஒருவர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் மற்றும் மனைவியை பொன்னாலை …
Read More »போக்சோ வழக்கை சட்டப்படி சந்திப்பேன்… – எடியூரப்பா
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூருவில் பேட்டியளித்த அவர், ஒரு மாதத்திற்கு முன் தனது வீட்டு வாசலுக்கு வந்த பெண் ஒருவர் காவல் துறையால் தனக்கு அநீதி நடந்ததாக தம்மிடம் முறையிட்டதாக கூறினார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அப்பெண் திடீரென தம்மீதே குற்றம்சாட்டியதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று எண்ணி காவல்துறை ஆணையரிடம் அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்தார். உதவி செய்தால் உபத்திரவமாக முடிவதை என்னவென்று …
Read More »ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் – மோடி
ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறையினர் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார். 2014ம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வரும் முன்பு அமலாக்கத்துறை சிறிய பொருளாதார குற்றவழக்குகளை விசாரித்து வந்ததாக தெரிவித்த மோடி, முந்தைய ஆட்சிகளில் மொத்தம்1800 வழக்குகள் மட்டும் பதிவானதையும் 5 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் 4700 வழக்குகள் பதிவானதையும் …
Read More »கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிக்கும் தி.மு.க – அண்ணாமலை
அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜ, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த மீஞ்சூர் சலீம்-ஐ பெங்களூரு விமான நிலையம் வரைச் சென்று தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். …
Read More »மோடி தலைமையில் 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் – நிர்மலா சீதாராமன்
பெண்கள் ராக்கெட்டே விட்டாலும், அவள் பெண் தானே என கருதப்பட்ட நிலையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் மாற்றியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். திருச்சியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். எதற்கெடுத்தாலும் சீனாவைப் பாருங்கள் என்று பேசுவது நடைமுறைக்கு ஒத்துவராது எனக் கூறியுள்ள நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையில் 2047க்குள் இந்தியாவும் வளர்ந்த நாடாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.
Read More »தொடங்கியது ரஷ்ய அதிபர் தேர்தல் – வாக்களித்தார் புதின்
ரஷ்யாவில் நடைபெறும் அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உக்ரைனுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். மூன்று நாள் நடைபெறும் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் முதல் நாளில் தலைநகர் மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் ஆன்லைன் மூலம் புதின் வாக்களித்தார். நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவின்போது வாக்குப்பெட்டிக்கு தீவைத்தல், வண்ண மை ஊற்றுதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட வாக்காளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Read More »ரஷ்யாவிற்கு விரைவில் தகுந்த பாடம் புகட்டப்படும் – ஜெலன்ஸ்கி
கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் நகரான ஒடேசாவின் குடியிருப்புப் பகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஒடேசாவின் குடியிருப்பு பகுதி மீது வீசப்பட்ட குண்டுகளால் கட்டடங்கள் இடிந்து 20 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி, ரஷ்ய கொலையாளிகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தகுந்த நேரத்தில் கடுமையான தாக்குதல் நடத்தும் என்றார்.
Read More »இலங்கை செய்திகள் 16/03/2024
இலங்கை செய்திகள் 16/03/2024
Read More »