நாடு முழுவதும் சீரான வானிலை! காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் …
Read More »மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை
மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை மெக்சிகோ அதிபர் கிளாடியா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சுவார்ததை நடத்தினார். அகதிகள் பிரச்சினை, உயிரைக் கொல்லும் போதை மருந்துகள் அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படும் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் பற்றி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டிரம்ப் அரசு அறிவித்த புதிய 25 சதவீத இறக்குமதி வரிவிதிப்பு ஒருமாத காலம் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – …
Read More »இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – 2025 செவ்வாய்க்கிழமை
இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – 2025 செவ்வாய்க்கிழமை குரோதி வருடம் தை மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4.02.2025 சசந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.54 வரை சஷ்டி. பின்னர் சப்தமி . இன்று அதிகாலை 02.30 வரை ரேவதி . பின்னர் அஸ்வினி. பூரம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது …
Read More »பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மாணவர்களின் எதிர்காலத்தை விட தங்கள் அரசின் நற்பெயர் தான் முக்கியம் என கருதும் ஆம் ஆத்மி, உறுதியாக தேர்ச்சிபெறுபவராக கருதப்படும் மாணவர்களை மட்டும் தான் 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயில அனுமதிப்பதாக குற்றஞ்சாட்டினார். இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
Read More »இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி குலொயா ஷியின்பனு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தியின்போது மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் இடம் குலொயா உறுதி அளித்தார். மேலும், உடனடியாக மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி குலொயா உறுதி அளித்தார். …
Read More »அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஜோஸ் பட்லர்!
அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஜோஸ் பட்லர்! இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது. குறித்த போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4 – 1 எனும் அடிப்படையில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் இருபதுக்கு 20 தொடரை இழந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் “தற்போது இருபதுக்கு 20 போட்டிகளில் மிகச்சிறந்த …
Read More »இடைநிறுத்தப்பட்டிருந்த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் !
இடைநிறுத்தப்பட்டிருந்த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் ! பரீட்சைக்கு முன்னதாக வினாக்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், காலவரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டிருந்த வடமத்திய மாகாணத்திலுள்ள தரம் 11 க்கான தவணை பரீட்சைகள் மீண்டும் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பௌத்தம் மற்றும் தமிழ் பாடங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடங்களும் இன்று முதல் நடைபெறவுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச்செயலாளர் சமன்குமார எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார். அத்துடன், இந்த பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள கோட்டக்கல்வி அலுவலகங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு …
Read More »ஈரோட்டில் பணம் கொடுக்காமல் வாக்கு பெற முடியுமா..? சீமான் கேள்வி
ஈரோட்டில் பணம் கொடுக்காமல் வாக்கு பெற முடியுமா..? சீமான் கேள்வி நாம் தமிழர் கட்சியினர் எனக் கூறிக் கொண்டு சொந்த கட்சியினரையே மீண்டும் தி.மு.கவில் இணைத்து வருவதாகவும், பணம் கொடுக்காமல் அவர்களால் ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு பெற முடியுமா என சீமான் கேள்வி எழுப்பினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சூரம்பட்டி தெருமுனைக் கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு கூறினார். பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்!
Read More »பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்!
பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்! க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தைப் பாடசாலை மட்டத்திலும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கல்வித்துறையைச் சேர்ந்தவர்களைப் பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேவையான பயிற்சிகள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கல்வித்துறைசார் பணியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவை …
Read More »மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று!
மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று! இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82ஆவது வயதில் கடந்த புதன் கிழமை இரவு காலமானார். தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் காலமானார். இந்தநிலையில், மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு …
Read More »