பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கிடைக்கப்பெற்றுள்ள சகல முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறலுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரையில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை, பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய 309 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 92 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More »ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும் – சஜித்!
எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமும் தொலைநோக்குப் பார்வையும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக்கூடிய திறமையான உறுப்பினர்களைக் கொண்ட குழுவையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. தன்னாலும் ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும். குறுகிய அரசியல் …
Read More »Bigg Boss Tamil Season 8 Live
Bigg Boss Tamil Season 8 Live
Read More »இஸ்ரேலிய பிரதமரின் இல்லத்தின் மீது தாக்குதல்!
லெபனானிலிருந்து இன்று காலை இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தினால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான இல்லம் தாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வடக்கு கரையோர நகரமான செசேரியாவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த தாக்குதலின்போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ, அவரது குடும்பத்தினரோ அங்கு இருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
Read More »சந்தையில் மேலும் அதிகரித்த தேங்காய் விலை!
சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். இதன்படி, சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 170 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையில் எவ்விதக் குறைவும் ஏற்படாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Read More »பொதுத் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களைப் புறக்கணித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வெளிப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிந்துஜன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எங்களுடைய வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்தின் தரப்பில் நின்று தமிழர்களுடைய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களையே தெரிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என எஸ்.சிந்துஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »அனுரவால் தனியாக நாட்டை நடத்த முடியாது – ஹரிணி
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமைசாலியாக இருந்தாலும் அவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகமவில் இன்று (19) இடம்பெற்ற பேரணியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் கடந்த 75 வருடங்களாக ஆட்சியிலிருந்த எவரும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைக்கும் என நினைக்கவில்லை. அந்த அதிகாரத்தை மக்கள் தமக்கு வழங்கியதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்புவது கடினம் எனவும் இம்முறை நல்லதொரு …
Read More »Pavithra பற்றி உண்மையை உடைத்த Jacklin..!! மண்ணை கவ்விய பிக் பாஸ்
Pavithra பற்றி உண்மையை உடைத்த Jacklin..!! மண்ணை கவ்விய பிக் பாஸ்
Read More »அதிரடியாக போட்டியாளர்களை திணறடித்த விஜய் சேதுபதி.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்
தமிழக மக்களின் நெஞ்சம் வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸோடு முதலே ரசிகர்களை ஈர்த்து …
Read More »ஆண் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ்.. தர்ஷா கேட்ட கேள்வி!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 15ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் சம்பாதித்த பணத்தை விட அதிகமாக செலவு செய்து விட்டதால் அவர்களுக்கு பிக் பாஸ் தண்டனை கொடுத்திருக்கிறார். அதைக்கேட்ட தர்ஷா குப்தா ஆண் போட்டியாளர்களை விளாசி எடுத்து இருக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். இதில் …
Read More »