பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்

ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாகப் பிரித்தானிய அரச மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் மருத்துவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் பணியாற்றிவந்த புலம்பெயர் பின்னணி கொண்ட மருத்துவர்களில் 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது

புலம்பெயர்ந்தோர் என்பதற்காக மோசமாக விமர்சிக்கப்படுதல் மற்றும் மோசமாக நடத்தப்படுதலே இந்த மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறக் காரணம் எனக் கூறப்படுகிறது.