Breaking News
Home / இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி

மகாராஷ்டிரத்தில்

மகாராஷ்டிரத்தில் அரசு அமைக்க எந்தக் கட்சியும் முன்வராத நிலையில், ஆளுநரின் பரிந்துரையை அடுத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையைப் பெற்றன. முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைத் தங்களுக்குத் தர வேண்டும் என சிவசேனா பிடிவாதமாக வலியுறுத்தியதாலும், அதை பாஜக ஏற்காததாலும் அந்தக் கூட்டணி முறிந்து போனது. இந்நிலையில் 105 இடங்களை …

Read More »

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது – மேற்கு வங்காள கவர்னர்

சூப்பர்

மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார், நான் ரஜினிகாந்தின் ரசிகர் என தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கார், கொல்கத்தாவிலுள்ள ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கவர்னர் கூறியதாவது: ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு மக்கள் செலவாக்கு உள்ளதஅவரது சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும் பார்த்து இருகி்றேன். ஆனால்,அரசியலில் …

Read More »

அவசர அவசரமாய் அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது ஏன்?

அயோத்தி

அவசர அவசரமாய் அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. பாபர் மசூதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு 3 தரப்பு உரிமை கோரியது. சன்னு வபு வாரியம், நிர்மோஹி அஹாரா , ராம் லல்லா அமைப்புகள் அலஹாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இம்மூன்று அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இடத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம் …

Read More »

அயோத்தி தீர்ப்பு, பாஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி – காங்கிரஸ்!

பாபர் மசூதி

அயோத்தி தீர்ப்பின் மூலம் பாஜக போன்ற கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்பு நவம்பர் 14 அல்லது 15 ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக …

Read More »

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை – பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என பாரத பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்த நாடும் எதிர்ப்பார்த்திருந்த அயோத்தி சர்ச்சை நில வழக்கின் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒரே தீர்ப்பான வழங்கினர். அதில், அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம் எனவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் …

Read More »

அணு ஆயுத ஏவுகனையை பரிசோதனை செய்கிறது இந்தியா

இந்தியா

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ள அணு ஆயுத ஏவுகணை நாளை மறுதினம் பரிசோதனை செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கே4 அணு ஆயுத ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை கடந்த அக்டோபர் மாதம் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அப்போது பரிசோதனை செய்யப்படவில்லை. இந்நிலையில் கே 4 அணு ஆயுதம் நாளை மறுநாள் …

Read More »

தீவிரவாதிகள் ஊடுருவல்; அயோத்தி தீர்ப்பு தள்ளிவைப்பா?

பாபர் மசூதி

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், 7 தீவிரவாதிகள் உத்தரப் பிரதேசத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகவே அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு என்பதில் பிரச்சனை எழுந்துவருகிறது. இது குறித்தான விசாரணையில் தீவிரமாக உச்சநீதிமன்றம் இறங்கியுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன் ஆகிய நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு …

Read More »

மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு

மகா புயல்

மகா புயல் குஜராத் கடற்கரையை நோக்கி செல்வதால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 6 மற்றும் 7ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ராஜ்கோட், போர்பந்தர், அகமதாபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை மகா புயலால் லேசானது முதல் …

Read More »

பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்த கொடூரர்கள்! உ.பியில் சோக சம்பவம்!

பெண்ணை

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் முன்னே கற்பழித்து அதை செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் சித்ரகூட் மாவட்டத்தில் மவூ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவர் குடும்பத்தாரோடு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது குறுக்கே வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று குடும்பத்தாரை பிடித்து மரத்தில் கட்டியுள்ளனர். பிறகு அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் …

Read More »

சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன்..பிரதமர் மோடி டிவிட்

மோடி

சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. நள்ளிரவில் ரிக் என்ற இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, …

Read More »