2026 பாதீடு ஏமாற்றமா? விமல் வீரவங்ச குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை விடுவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் முன்வைக்கப்படவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.

பாதீடு தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்துடன், நாட்டின் கையிருப்பு 2027ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது, நாட்டின் பொருளாதாரம் 6.3 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது 6.2 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, சுற்றுலாத்துறையினூடாக மாத்திரம் இலாபத்தை ஈட்ட முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.