ஒருசிலர் தமக்கு பிராந்தியம், இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள் – ஆனந்த விஜேபால

தொல்பொருள் திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையில் எவ்விடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை காணப்படுகிறது.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. வடக்கு , கிழக்கு , மேற்கு, தெற்கு என்று மாகாண அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது. தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளை அகற்றி இனவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும்

ஒருசிலர் தமக்கு பிராந்தியம் மற்றும் இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். தொல்பொருள் திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆனந்த விஜேபால