இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் – இலங்கைக்கு உடனடி உதவி!

திட்வா புயலின் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கையர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான இயல்பு நிலைக்காகப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்தியா உடனடியாக “சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் அவசர நிவாரணப் பொருட்களையும், அத்தியாவசிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண ஆதரவையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமைக்கு ஏற்ப மேலும் உதவிகளையும், ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முதலிடம்” என்ற கொள்கை மற்றும் “விஷன் மகாசாகர்” வழிகாட்டுதலின்படி, இலங்கையின் தேவைப்படும் நேரத்தில் இந்தியா உறுதியுடன் துணை நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.