பிக் பாஸ் 9: இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

பிக் பாஸ் – 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரமும் இருவர் வெளியேறியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 28 நாள்களே உள்ளதால், போட்டி விறுவிறுப்பு அடைந்துள்ளது.

ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காடி, அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்த வாரம் வெளியேறுவதற்கான போட்டியாளர்கள் பட்டியலில் விஜே பார்வதி, சான்ட்ரா, அமித் பார்கவ், எஃப்.ஜே., கமருதீன், அரோரா, ஆதிரை, திவ்யா கணேசன், சுபிக்‌ஷா, சபரிநாதன், கனி திரு ஆகிய 11 பேர் இடம்பெற்று இருந்தனர்.

இவர்களின் விளையாட்டைப் பார்த்து மக்கள் இவர்களுக்கு வாக்களித்ததன் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

அதன்படி, இந்த வாரம் ஆதிரை மற்றும் எஃப்ஜே ஆகிய இருவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நடிகை ஆதிரை வைல்டு கார்டு மூலம் இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.