பிக் பாஸுக்குள் நடந்த நாடகம்! அமித்தை தொடர்ந்து இன்று வெளியேறும் போட்டியாளர்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் அமித் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவரை தொடர்ந்து இன்று யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் அதிகமான கருத்துக்களைப் பற்றி வருகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத சம்பவம்தான் நடந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்னும் மூன்று வாரத்தில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும் இந்த சீசனில் மட்டும் யார் டைட்டில் வின்னராக போகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் தான் விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் வெளியே செல்லும் போட்டியாளர்களை பார்த்து இது அன்ஃபேர் எவிக்ஷன் என்று ரசிகர்களால் சொல்ல முடியாத வகையில் தான் ரசிகர்களின் நிலைமை இருக்கிறது. எந்த போட்டியாளர் வெளியே சென்றாலும் விளையாட்டு மாறியது போல தெரியவில்லை. நிலைமை இப்படி இருக்க நேற்று அமித் பார்கவ் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

அமித் வெளியேற்றம் கூட பெரிதாக பரபரப்பு ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த வார வாக்குகளின் அடிப்படையில் அரோரா அல்லது சுபிக்ஷா வெளியேற்றுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத மாதிரி அமித் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவரை தொடர்ந்து இன்றைய எபிசோடில் சான்ட்ரா அல்லது கனி இவர்கள் இருவரில் தான் ஒருவர் வெளியேற்ற போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதை உறுதி செய்யும் வகையில் தற்போதைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் உள்ளிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் இவர்கள் இருவரில் யார் உள்ளே இருக்க வேண்டும் யார் வெளியேற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்க, சொல்லி வைத்தது போல எல்லா போட்டியாளர்களும் கனி உள்ளே இருக்க வேண்டும் சான்ட்ரா வெளியே போக வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவிக்க வேண்டி இருக்கிறார்கள்.

அப்போது விஜய் சேதுபதி நீங்க சான்ட்ரா வெளியேற்ற வேண்டும், கனி உள்ளே இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறீங்க ஆனா மக்கள் என்ன விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று கார்டு எடுத்துக்காட்ட சான்ட்ரா கனியை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். இதிலிருந்து கனி வெளியே போகிறார் என்று தெரிகிறது.

கனியின் விளையாட்டு ஆரம்பத்தில் பாராட்டப்பட்டாலும் பிறகு அவர் சிலரை சேர்த்து கேங்காக சேப் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டது. அதோடு எப்ஃஜேவுடன் அவர் பழகியது கூட அதிகமான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் இந்த வாரம் கனி வெளியேற்றப்பட்டு இருப்பது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படுகிறது.

காரணம் கனி உடைய விளையாட்டு இந்த நிகழ்ச்சிக்கு தேவை என்று இல்லை என்றாலும் சான்ராவை எதற்காக சேவ் பண்ணி மீண்டும் இந்த வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்? என்றுதான் பலரும் கேட்கிறார்கள். அதோடு விஜய் சேதுபதி சான்ட்ராவை காப்பாற்றுகிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.