விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது இந்த சீசனில் ஃபேமிலி ரவுண்ட் நடைபெறுவதால் சுவாரஸ்யமாக காணப்படுகிறது.
ஏற்கனவே சாண்ட்ராவின் ஃபேமிலி , சபரி, கானா வினோத், கனி ஆகியோரின் குடும்பங்கள் உள்ளே வந்து சென்றிருந்தனர். இதன் போது சாண்ட்ராவின் குழந்தைகள் அழுத காட்சியும், கானா வினோத்திற்கு அவருடைய மனைவி கொடுத்த அட்வைஸும் வைரலாக இருந்தது.
இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அமித்தின் மனைவி உள்ளே வந்துள்ளார். இதன்போது அமித்திடம் பேசிய அவருடைய மனைவி, சாண்ட்ரா சோகமாக இருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கின்றாய்.. ஆனால் அவங்களுடைய கேம் சும்மா இல்ல.. அவங்க தமிழ், மலையாளம் என பல பிக் பாஸ் எல்லாம் பார்த்து கரைச்சு குடிச்சிட்டு வந்திருக்காங்க.
மேலும் அரோரா பற்றி கூறும்போது, அவங்க எல்லாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க.. யார் என்ன பேசினாங்க.. எப்ப பேசினாங்க.. என்று எல்லாத்தையுமே மைண்ட்ல வச்சிருக்காங்க.. அத வீட்டுல பேசினா நல்லா இருக்குமா? இல்ல வீகெண்டுல பேசினா நல்லா இருக்குமா? என்று பக்காவா விளையாடுறாங்க..
மேலும் பார்வதி அடுத்த கட்டத்துக்கு போறதுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வா . அதனால விழிப்பா இரு என்று சொல்லியுள்ளார்.





