கம்ருதீனுக்கு தன் சுயரூபத்தைக் காட்டிய அரோரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது சூடு பிடித்த நிலையில், ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களின் சண்டைகள், வாக்குவாதங்கள், மற்றும் மன உளைச்சல்களால் நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 64ஆவது நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அரோரா மற்றும் கம்ருதீனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காட்டப்படுகிறது.

ப்ரோமோவில், அரோரா தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதாவது, “துஷார்..துஷார்… என்று எத்தனை தடவை சொல்லுவீங்க.!” என்று கம்ருதீனைப் பார்த்துக் கேட்கிறார் அரோரா.

மேலும், “நான் விளையாடுறது என்ர இஷ்டம்… இவ்வளவு நாளா ‘அரோரா’ என்று சொல்லிக்கொண்டு இருந்திட்டு… உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என்கிட்ட நேரடியாக மோதுங்க. ஒரு போட்டியாளர் போய்ட்டாங்க அதை வைச்சு என்ன டெய்லி hurt பண்ணிக் கொண்டிருக்காதீங்க.” என்றார்.

இதற்கு கம்ருதீன், “நீதானே துஷார் வெளியில போய்ட்டான் என்ர நினைப்பு இருக்குமோ தெரியல என்று சொன்ன…” என்கிறார். அதைக் கேட்ட அரோரா, நான் அப்படி ஒன்றும் சொல்லேல என்று கோபமாக கத்துறார்.