எட்டி உதைத்த கமருதீன்: நெஞ்சில் குத்திய பார்வதி!

பார்வதி – கமருதீன் மோதல்: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பார்வதி – கமருதீன் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வாரங்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது பார்வதி, கமருதீன், சாண்ட்ரா, விக்ரம், வினோத், அரோரா, திவ்யா கணேஷ், சபரிநாதன், சுபிக்‌ஷா உள்ளிட்டோர் விளையாட்டில் தொடர்ந்து வருகின்றனர்.

நேற்றைய ஒளிபரப்பின் போது, கமருதீன் – பார்வதி இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான உறவு முறிவு குறித்து ஒருவர் மீது ஒருவர் மாறிமாறிக் குற்றச்சாட்டை முன்வைத்ததால் பரபரப்புடன் காணப்பட்டது.

இதனிடையே, வழக்கமாக 13வது வாரத்தில் நடத்தப்படும் டிக்கெட் டூ பைனல் (இறுதிப் போட்டிக்கு நேரடித் தகுதி) குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. முதல் டாஸ்க்கில் சுபிக்‌ஷா வெற்றி பெற்று 9 புள்ளிகள் பெற்றார்.

இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

போட்டியாளர்களுக்கு இரண்டாவது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின் போது கமருதீனும் பார்வதியும் ஒருவரை ஒருவர் வீழ்த்தும் வகையில் விளையாடுகின்றனர்.

தொடர்ந்து, இருவரும் மாறிமாறி வார்த்தை மோதலில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். அப்போது, ஆத்திரமடைந்த கமருதீன், பார்வதி சேகரித்து வைத்திருந்த பந்துகள் அடங்கிய பாத்திரத்தை காலால் எட்டு உதைக்கிறார்.

இதையடுத்து, கமருதீனின் நெஞ்சில் பார்வதி அடிக்கிறார். உடனடியாக இருவரையும் சக போட்டியாளர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

கமருதீன் – பார்வதி இடையேயான மோதல் நாளுக்குநாள் முற்றிவரும் நிலையில், பிக் பாஸ் பார்வையாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.