Bigg Boss: கம்ருதீனிடம் நறுக்குன்னு கேட்ட கானா வினோத்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது சமூக வலைத்தளங்களை முழுவதுமாக ஆக்கிரமித்து வருகிறது. “இது ரியாலிட்டி ஷோவா, மனிதர்களின் உண்மை முகத்தை காட்டும் ஆய்வகமா?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு, இந்த சீசனில் நடக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிர்ச்சியை அதிகரித்து வருகிறது.

நேற்று நடந்த ஒரு டாஸ்க், இந்த சீசனின் மிகவும் சர்ச்சையான, கோபத்தை கிளப்பிய நிகழ்வாக மாறியுள்ளது.

விளையாட்டா… வன்முறை
நேற்று நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில், கார் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், “யார் அதிக நேரம் உள்ளே இருக்கிறார்களோ, அவர்களுக்கு அதிக பாயிண்ட்” என்ற விதத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் விளையாட்டு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அது வாக்குவாதம், மோதல், கைகலப்பு என்ற பாதைக்கு மாறியது.

இந்த டாஸ்கின் போது, கம்ருதீன் – பார்வதி இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை மிதித்து கீழே தள்ளிய காட்சி, பார்ப்பவர்களை உறைய வைத்தது. ஆனால் அப்போது அமைதியாக இருந்த சாண்ட்ரா… ஆனால் எல்லை தாண்டியதும் உடைந்தார்

சண்டை தொடங்கிய போதும், சாண்ட்ரா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் அமைதியாகவே இருந்து வந்தார். ஆனால் அவரை கீழே தள்ளியதும்,
அவருக்கு பிக்ஸ் ஏற்பட்டது, உள்ளிருந்த மற்ற போட்டியாளர்களும் உடனடியாக அவருக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்தனர்.

நேற்று வரை நண்பர்கள், இன்று எதிரிகள்
அதிர்ச்சி என்னவென்றால், ஆரம்பத்தில் பார்வதியுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்ததும், அவருடன் சேர்ந்து விளையாட்டை தொடங்கியதும் சாண்ட்ராதான். முன்னதாக திவ்யா கணேஷுடன் இணைந்து விளையாடிய சாண்ட்ரா,பிரஜன் வெளியேறிய பிறகு திவ்யா கணேஷுடன் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அசிங்கப்படுத்தும் அளவிற்கு சண்டையிட்டிருந்தார்.

ஆனால் நேற்று சாண்ட்ராவுக்கு பிரச்சனை வந்தவுடன், அதே திவ்யா கணேஷ் முதல் பலர் ஒரே குரலில் பார்வதி – கம்ருதீனை எதிர்த்து சண்டை போட தொடங்கினர். உன்னை அடிச்சிட்டு ரெட் கார்டு வாங்கினாலும் பரவாயில்லை! என்று கோபத்தின் உச்சத்தில், திவ்யா கணேஷ் – பார்வதியை அடிக்கத் தயாராகும் அளவிற்கு சென்றார்.

துப்பிய கானா வினோத்
இந்த விவகாரம் உச்சத்தை எட்டியது, கானா வினோத் களத்தில் இறங்கியபோது. பார்வதி மற்றும் கம்ருதீனை கடுமையாக திட்டிய கானா வினோத், பார்வதியின் முகத்திலேயே கானா வினோத் ஹெச் துப்பிய காட்சி, பலருக்கு மனதளவில் “ஆறுதல்” கொடுத்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நாங்கள் நினைத்ததை நீங்க செஞ்சிட்டீங்க பாஸ் என்று சமூக வலைத்தளங்களில் கானா வினோத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குடும்பத்தை இழுக்கலாமா
கானா வினோத் கோபமாகி நேரடியாக கேள்வி எழுப்பினார்: நீ சாண்ட்ரா பெயரை வேற மாதிரி சொல்லி கிண்டல் பண்ணுனா… அதே மாதிரி அவங்க உன் கம்ருதீன் பெயரை காமரூதீன் என்று சொன்னாங்க… அதுக்காக குடும்பம், பிள்ளைங்க, புருஷன் எல்லாரையும் அசிங்கப்படுத்துறதா?
அவங்களை மிதிச்சு வெளியே தள்ளுறதா? இது எந்த வகையில நியாயம்?”

இந்த கேள்விக்கு பார்வதி, வழக்கம்போல் கம்ருதீனை ஏற்றிவிடும் போக்கில் பேசியதும், கானா வினோத் கடுப்பாகி, உன்னுடைய அழிவுக்கு காரணமே இவதான்… இவ எல்லாம் மனுஷியே இல்ல… என்ன பொம்பளையோ!” என்று கடுமையான வார்த்தைகளை வீசினார். ஒருபுறம், கானா வினோத்தை ஹீரோவாக கொண்டாடும் ரசிகர்கள், மறுபுறம்,பார்வதியின் ரசிகர்கள் கானா வினோத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சனிக்கிழமை பஞ்சாயத்து
எது எப்படியோ, இந்த முழு பஞ்சாயத்தையும் வைத்து, இன்று சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி “பிக் பாஸ் பஞ்சாயத்து கூட்டம்” நடத்துவது உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.