Monday , July 23 2018
Breaking News
Home / Tamil Nadu News

Tamil Nadu News

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்!

Sarathkumar

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் நடிகை ராதிகா மற்றும் யோகிபாபு ஆகியோர் இணைந்துள்ளனர். ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படங்களையடுத்து சிவகார்த்திகேயனுடன் எம்.ராஜேஷ் கூட்டணி அமைத்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் புரொடக்‌ஷனில் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். Lovely to join the lively team …

Read More »

தமிழகத்தை போர்க்களமாக மாற்றாதீர்கள் கமல்: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு

தமிழகத்தை

தமிழகத்தை போர்க்களமாக மாற்றும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்க வேண்டாம் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர், இயற்கை ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி …

Read More »

கருணாநிதி பதவியை கைப்பற்றும் ஸ்டாலின்: திமுகவில் அதிரடி மாற்றங்கள்

திமுகவை தோற்றுவித்த அண்ணா மறைந்தபின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி கடந்த ஐம்பது ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பதவியில் மு.க.ஸ்டாலினை அமர வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், அதனுடன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், திமுகவுக்கு புத்துணர்வு கொடுக்க முடிவு செய்துள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் தலைவர் பதவியை தனக்குரியதாக்க முடிவுசெய்துள்ளதாக …

Read More »

கணினிமயமான மொய் விருந்து: 2கோடி வரை வசூல்!

தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழா, கணினி மயமாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம், காதணி போன்ற விழாக்களில் மொய் செய்யும் முறையானது வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், கொத்தமங்கம், அணவயல் உள்ளிட்ட பகுதியில் மொய் விருந்து விழா எனும் பிரத்தியேக விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில், சுமார் 20 பேர் சேர்ந்து ஒரே இடத்தில் நடத்தப்படும் இவ்விழாவில் அதிகபட்சமாக ஒரு டன் வரை …

Read More »

கருப்பு சட்டையிலிருந்து வெள்ளை சட்டைக்கு மாறிய சரத்குமார் : காரணம் என்ன ?

நான்கு மாதங்களுக்குப் பிறகு கருப்பு நிற சட்டையில் இருந்து வெள்ளை நிற சட்டைக்கு மாறினார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். தமிழகத்தை பொறுத்தவரையில் காவிரி பிரச்சினை என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு போராட்டங்கள் இன்றளவும் நடந்து வருகிறது. இதையடுத்து கர்நாடக தமிழகத்துக்கு உரியக் காவிரி நீர் வழங்கும் வரை கருப்பு சட்டை மட்டுமே அணிவேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்து இருந்தார், …

Read More »

40 கிடாய் வெட்டி தினகரனுக்காக நேர்த்திக்கடன் முடித்த ஆதரவாளர்: சுவாரஸ்யமான தகவல்கள்!

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதையடுத்து அதற்கான நேர்த்திக்கடனாகத் தினகரன் ஆதரவாளர் கிடாய் வெட்டிக் கொண்டாடியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கிய டி.டி.வி.தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தினகரன் ஆதரவாளர்கள் அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் அவ்வாறு நடந்து விட்டால் பல்வேறு நேர்த்திக் கடன் செய்வதாகவும் வேண்டிக் கொண்டு தலையில் தேங்காய் உடைத்தல், பால்குடம் போன்ற தங்களது நேர்த்திக்கடனைச் செய்து …

Read More »

சென்னை கட்டிடம் இடிந்து விபத்து: 18 வயது தொழிலாளி பலி!

சென்னையில் தனியார் கட்டடப் பணியின்போது, சாரம் சரிந்து விழுந்த விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சென்னை கந்தன்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் ஜெம் மருத்துவமனையின் பின்பகுதியில் ஜெனரேட்டர் வைப்பதற்காக இரும்புராடுகள் மூலம் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில், பீகார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஏழரை மணியளவில், கட்டுமானத்துக்காகக் கட்டப்பட்டிருந்த சாரம் …

Read More »

சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு

சேலத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, கமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததாலேயே நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Read More »

சினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்

சினிமா டிக்கெட் வாங்கினால் 30% சலுகை என்ற ஆசை காட்டி ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ஒரு நூதன விளம்பரம் கொடுத்தார். அதன்படி கொடைக்கானலில் உள்ள ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு டிக்கெட் விலையில் 30% தள்ளுபடி என்று அறிவித்தார். இதனை நம்பி ஆன்லைனில் பலர் தங்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை …

Read More »

சீமானுக்கு ஜாமீன்: சிறை வாசலில் பலத்த வரவேற்பு

சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை-சேலம் 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை அழிக்கும் இந்த திட்டத்திற்கு அதிமுக, பாஜக …

Read More »