உலக செய்திகள்

உலக செய்திகள்

Ukவில் இன்று பட்ஜெட் தாக்கல்

Ukவில் இன்று பட்ஜெட் தாக்கல்

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் வைட்ஹாலில் (Whitehall) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மெட் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறி டிராக்டர்களை அந்தப் பகுதிக்குள் செலுத்தி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள குடும்ப பண்ணை வரிக்கு (‘family farm tax’) எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்ட அமைப்பாளர்கள், விவசாயிகள் கலந்துகொள்வதைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளதுடன், […]

தொலைபேசியில் உரையாடிய முக்கிய தலைவர்கள்

தொலைபேசியில் உரையாடிய முக்கிய தலைவர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதியை சீனாவுக்கு அழைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று சீன ஜனாதிபதி அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்காவுக்கு […]

கனடாவின், புதிய குடியுரிமை சட்டமூலம் ஜனவரியில் நடைமுறைக்கு!

கனடாவின், புதிய குடியுரிமை சட்டமூலம் ஜனவரியில் நடைமுறைக்கு!

கனடாவின், புதிய குடியுரிமை சட்ட மூலமான சி-3 எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, கனடாவின் குடியுரிமை சட்ட, திருத்த சட்ட மூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, சி-3 எனும் புதிய திருத்த சட்ட மூலத்தைக் கனடா முன்வைத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. […]

Snapchat கொடுத்த ட்விஸ்ட்

Snapchat கொடுத்த ட்விஸ்ட்

அவுஸ்திரேலியாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்று ஸ்னாப்சாட் (Snapchat )கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு உலகின் முதல் சமூக ஊடகத் தடையை அமுல்படுத்த அவுஸ்திரேலியா தயாராகி வரும் நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களுக்கு இணங்கத் தவறினால் 49.5 […]

காஸா போர்நிறுத்தத்தை 497 முறை மீறிய இஸ்ரேல்

காஸா போர்நிறுத்தத்தை 497 முறை மீறிய இஸ்ரேல்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைமுறைக்கு வந்த காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல், 44 நாட்களில் குறைந்தது 497 முறை மீறியுள்ளதாக காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த மீறல்களால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் நடந்த தாக்குதல்களில், சுமார் 342 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களுமே அதிகமாக உள்ளனர் என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. […]

பிரித்தானியாவுக்கு செல்ல வேண்டுமா? - நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

பிரித்தானியாவுக்கு செல்ல வேண்டுமா? – நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

பிரித்தானியாவுக்கு விசா இன்றி பயணிக்கக்கூடிய அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உட்பட 85 நாடுகளின் பிரஜைகள், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி முதல் கட்டாயமாக மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorisation – ETA) பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவின் குடிவரவு முறைமையை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், எதிர்காலத்தில் தொடர்பற்ற பிரித்தானியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். 2026 பெப்ரவரி 25 முதல், […]

அடுத்தடுத்து பறக்கும் ஆளில்லா விமானங்கள் - விமான நிலையங்கள் அச்சத்தில்

அடுத்தடுத்து பறக்கும் ஆளில்லா விமானங்கள் – விமான நிலையங்கள் அச்சத்தில்

ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையம், இராணுவ தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறக்கின்றமை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், நெதர்லாந்தின் வோல்கெல் விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, அவற்றை சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு படையினர் முயற்சித்த நிலையில், குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, ஐன்ட்ஹோவன் விமான நிலைய வான் […]

பறவைக் காய்ச்சல்

வொஷிங்டன் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல்: ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு H5N5 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக இதுவரை அறிக்கைகள் எதுவும் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் […]

3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா

3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வசதியை பிரித்தானிய அரசாங்கம், அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய விதிமுறை, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய குடிவரவு சீர்திருத்தமாகக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, 125,000 பவுண்ட்ஸ்க்கும் மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான நிபந்தனைகளில் வேலைவாய்ப்பு […]

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்

ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாகப் பிரித்தானிய அரச மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் மருத்துவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் பணியாற்றிவந்த புலம்பெயர் பின்னணி கொண்ட மருத்துவர்களில் 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது புலம்பெயர்ந்தோர் என்பதற்காக மோசமாக விமர்சிக்கப்படுதல் மற்றும் […]