இன்றைய தினம் (25) தங்கவிலை 6,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்திலிருந்து தங்க விலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் இன்றைய தினம் அதிகரித்துள்ளது. அதன்படி , தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 309,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் […]
Other News
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (25) முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது […]
தொலைபேசியில் உரையாடிய முக்கிய தலைவர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதியை சீனாவுக்கு அழைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று சீன ஜனாதிபதி அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்காவுக்கு […]
கனடாவின், புதிய குடியுரிமை சட்டமூலம் ஜனவரியில் நடைமுறைக்கு!
கனடாவின், புதிய குடியுரிமை சட்ட மூலமான சி-3 எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, கனடாவின் குடியுரிமை சட்ட, திருத்த சட்ட மூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, சி-3 எனும் புதிய திருத்த சட்ட மூலத்தைக் கனடா முன்வைத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. […]
ஒருசிலர் தமக்கு பிராந்தியம், இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள் – ஆனந்த விஜேபால
தொல்பொருள் திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையில் எவ்விடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை காணப்படுகிறது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. வடக்கு , கிழக்கு , மேற்கு, தெற்கு என்று மாகாண அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது. தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளை அகற்றி இனவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் ஒருசிலர் தமக்கு […]
சஜித்துடன் நாமல் சங்கமிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி
“ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைய வேண்டும். இல்லையேல் அநுர அரசுதான் பலமடையும்.” ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் விதாரண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “அநுர அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியா, தோல்வியா என்பதைக் குறிப்பிட முடியாது. பொதுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு […]
நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு!
இந்த ஆண்டு இதுவரையில், 2 இலட்சத்திற்கும் அதிகமான புதிய வருமான வரி செலுத்துவோர் மற்றும் 18,000 நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மாஸ்க் படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம்!
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ‘மாஸ்க்’ படத்தின் முதல் நாள் […]
ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிப்பதாகவும் அந்த படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் தனது திரை வாழ்வில் தனது தனக்கு நெருக்கமான நண்பராக கமல் இருந்தாலும் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரஜினி இதுவரை எந்த படமும் நடித்துக் கொடுக்கவில்லை. தக் லைப் படத்தால் 150 […]
பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை – செல்லூர் ராஜூ
மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் உள்ள குளறுபடிகள் குறித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். ஆளும் திமுக அரசு தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைத்து மோசடியில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாக செயல்படவில்லை என்றும், சத்துணவு பணியாளர்கள் போன்றவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பல இடங்களில் படிவங்கள் வழங்கப்படவில்லை அல்லது […]





