திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளம் அதிகரித்ததால் இன்று காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின் உப்பாறு பாலத்துக்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மூதூர் பிரதேசம் வழியாக திருகோணமலை மற்றும் கிண்ணியாவினூடாக மட்டக்களப்புக்குச் செல்லும் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விடத்தில் அதிகளவில் தரித்து நிற்பதைக் கவனத்தில் கொண்டு, அவசர தேவையற்ற […]
Other News
உயிரிழந்த குழந்தையை அடக்கம் செய்ய முடியாமல் நடுவீதியில் தவித்த குடும்பம்..!!!
கிளிநொச்சி கண்டாவளை சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையை அடக்கம் செய்ய முடியாமல் இரு நாட்களாக தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக மாத குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குறித்த பெற்றோரின் வீட்டிற்கு செல்லும் வழியிலுள்ள பாலம் உடைந்ததாலும் அதிகரித்த வெள்ளப்பெருக்கினாலும் போக்குவரத்து தடைப்பட்டதால் குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு […]
யாழில். பட்டப்பகலில் வீதியில் ஓட ஓட இளைஞனை வெட்டிக் கொன்ற வன்முறை கும்பல்..!!!
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து […]
டிட்வா புயல் எதிரொலி.. சென்னையில் விமான கட்டணம் 6 மடங்கு உயர்வு!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் […]
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை…! பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்…!
வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் […]
டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!
டிட்வா புயல் நாகை வேதாரண்யத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கடந்த 30 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு கடும் குளிர் நிலவி வருவதோடு மக்களின் […]
இலஞ்சம் ஆணைக்குழுவின் போலி அறிக்கை மறுப்பு
அனர்த்த நிலைமைகளின்போது அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் எந்தவொரு அறிக்கையையும் தாம் வெளியிடவில்லை என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (Bribery Commission) மறுத்துள்ளது. இலஞ்சம் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் (Director General) வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவ்வாறான எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார். […]
தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்: பல ஆண்டுகளில் இல்லாத பேரழிவு
தெற்கு தாய்லாந்தில் பல வருடங்களில் இல்லாத மிக மோசமான வெள்ளப்பெருக்கைச் சந்தித்து வருகிறது. இடைவிடாது பெய்துவரும் மழை அப்பிராந்தியத்தைத் தாக்கி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். சோங்கலா மாகாணத்தில் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்
சுந்தர் சி விலகியது ஏன்? லதா ரஜினிகாந்த் விளக்கம்
சுந்தர்.சி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளிவந்து சில நாட்களுக்குள் சுந்தர் சி திடீரென இப்படத்திலிருந்து விலகினார். இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறிய விடயம் தான் தற்போது ஹைலைட். “அது அவருடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயம். அதைப் பற்றி நான் கூற விரும்பவில்லை” என்றார். கோவாவில் நடை பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட […]
இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக 6.5 டன் பொருட்கள் நன்கொடை
கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்தியாவின் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant), இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது இருப்பில் இருந்த பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. கப்பல் இருப்பு கிடங்கில் இருந்து 4.5 டன்கள் (4500 கிலோ) உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மற்றும் கூடுதலாக, 2 டன்கள் (2000 கிலோ) எடையுள்ள அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில், தங்குவதற்கு உதவக்கூடிய கூடாரங்கள் (tents), அவசரகால பயன்பாட்டுக்கான […]





