நாட்டில் பேரிடரால் ஏட்பட்டுள்ள அழிவுகளில் இருந்து நாட்டை மறுசீரமைப்பதட்கு தேவையான மூலதனத்தை திரட்டும் (Fund) பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க இன்று தெரிவித்தார்.
நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த நிதியை மேற்பார்வையிடுவதற்காக தனியார் துறை உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நிர்வாகக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
“அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான கணிசமான நிதியை நம்மால் திரட்ட முடியும்.”
“நமது நாடு புனரமைக்கப்படுவதற்குத் தேவையான நிதியைப் பெற நட்பு நாடுகளுடனும், பல்வேறு சர்வதேச அமைப்புகளுடனும் கலந்துறையடி
வருகிறோம்.”
“உள்நாட்டு வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் பங்களிப்பையும் நாங்கள் நாடி வருகிறோம்.”
“குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கை குடிமக்கள் மிகுந்த முயற்சி மற்றும் உற்சாகத்துடன் ஆதரவை வழங்கிவருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”
“இந்த அனர்த்தத்திலிருந்து நாடு மீண்டு வர வசதியாக ஒரு பலமான நிதியை நாம் நிறுவ வேண்டும்.”
“இந்த நிதியைத் திரட்டி, திறம்பட நிர்வகிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.





