சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரு நாட்களுக்கு இடம்பெறாது

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரண்டு நாட்களுக்கு இடம்பெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (நவம்பர் 27) மற்றும் நாளை (நவம்பர் 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்தார்.

மேலும், புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.