நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு!

இந்த ஆண்டு இதுவரையில், 2 இலட்சத்திற்கும் அதிகமான புதிய வருமான வரி செலுத்துவோர் மற்றும் 18,000 நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.