கோவையில் கொடூரம்! மனைவியைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்

தமிழக மாவட்டம் கோயம்புத்தூரில் மனைவியை படுகொலை செய்த கணவன், புகைப்படத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியைக் கொன்ற கணவன்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன.

கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீபிரியா கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோயம்புத்தூருக்கு சென்றுள்ள பாலமுருகன் மனைவி ஸ்ரீபிரியாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

பின்னர் மனைவியின் சடலத்துடன் எடுத்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அத்துடன் ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

மனைவி வேறொருவருடன் உறவில் இருந்ததால் இந்த கொடூரத்தை பாலமுருகன் அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.