பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தெற்கு வேல்ஸில் (south Wales) பலத்த மழை பெய்யும் என்று முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.
MET OFFICE இன் அறிவிப்பின்படி இன்றைய தினம் 60-80 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அலுவலகம், வெள்ள அபாயம் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் அதிக காற்று வீசும் எனவும் இதனால் மக்கள் சாத்தியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.





