கலிபோர்னியாவின் (California) ஸ்டொக்டனில் (Stockton) அமைந்துள்ள விருந்துபச்சார மண்டபம் ஒன்றில் நேற்று மாலை பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி மண்டபத்தில் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றதாக ஸ்டொக்டன் மேயர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அதிகாரிகள் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
யாரேனும் ஒருவரை குறி வைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





