Other News

சாய்ந்தமருது பகுதியில் கால்வாயில் விழுந்த கார் : மூவர் பலி!

சாய்ந்தமருது பகுதியில் கால்வாயில் விழுந்த கார் : மூவர் பலி!

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இன்று(27) முற்பகல் இடம்பெற்றது. குறித்த காரில் ஆண் பெண் சிறுமி என மூவர் இருந்த நிலையில் அவர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். […]

தன்னார்வ இராணுவ சேர்க்கை – மக்ரோன் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்துவரும் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரான்ஸ் புதிய இராணுவ சேவை திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron) இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு இளைஞர்களுக்கு தன்னார்வமாக இராணுவத்தில் பணியாற்ற ஒரு புதிய விருப்பத்தை வழங்குவதற்கான தனது நோக்கத்தை மக்ரோன் ஆண்டின் தொடக்கத்தில் வெளிப்படுத்திய நிலையில் புதிய அறிவிப்பு வரவுள்ளது. ரஷ்யாவின் போர் ஐரோப்பிய கண்டத்தை “பெரும் ஆபத்தில்” ஆழ்த்தியதால், பிரான்ஸ் தனது பாதுகாப்பை […]

தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு சஜித் வலியுறுத்தல்!

தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு சஜித் வலியுறுத்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, ​​இந்த கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச தெரிவித்தார். “பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். […]

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தேசிய காவல்படை வீரர்கள் 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பில், சம்பவ இடத்தில், பலத்த காயங்களுடன் சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது பற்றி ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகத் தலையிட்டு உயிர் இழப்புகளைத் தடுக்கவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை குறித்து ஆராய, இன்று (27) முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை […]

தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி

தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (27) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 308,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,875 […]

சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரு நாட்களுக்கு இடம்பெறாது

சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரு நாட்களுக்கு இடம்பெறாது

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரண்டு நாட்களுக்கு இடம்பெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (நவம்பர் 27) மற்றும் நாளை (நவம்பர் 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்தார். மேலும், புதிய பரீட்சைத் […]

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விஜய்யுடனான இந்த சந்திப்பு தமிழக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், கட்சியில் இணைவதற்கு முன் தனக்கு வழங்கப்படும் பதவி குறித்து […]

அன்று மீனவர்களை கொன்றவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிப்பு - ரத்ன கமகே

அன்று மீனவர்களை கொன்றவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிப்பு – ரத்ன கமகே

“ ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இவற்றை மறந்து தற்போது மீன்பிடித்துறை பற்றி கதைக்கின்றனர்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில் , நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் பிரதி அமைச்சர் ரத்ன […]

ஹாங்காங்கில் (Hong Kong) தீவிபத்து – நால்வர் பலி

ஹாங்காங்கில் (Hong Kong) தீவிபத்து – நால்வர் பலி

ஹாங்காங்கின் (Hong Kong) வடக்கு தை போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக […]