வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தேசிய காவல்படை வீரர்கள் 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில், சம்பவ இடத்தில், பலத்த காயங்களுடன் சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது பற்றி ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மிகவும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நமது மாபெரும் தேசிய காவல்படையையும், நமது இராணுவ மற்றும் சட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகளை கடவுள் ஆசீர்வதிப்பார். அவர்கள் உண்மையிலேயே சிறந்த மனிதர்கள். அமெரிக்காவின் ஜனாதிபதியாக நானும், உங்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்பேன்.” என ட்ரம்ப் கூறியுள்ளார்.