Arul

விஜயதாச ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் அதன் அரசியல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகியோர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான …

Read More »

யாழில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12) பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 3 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள், ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் …

Read More »

15 வயது சிறுமிமீது கூட்டு வன்புணர்வு- நால்வர் கைது!

வவுனியா – நகரையண்டிய, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 15 வயது பெண் ஒருவரை கடந்த ஜனவரி மாதம் வவுனியா நகரையண்டிய பகுதியில் தேக்கவத்தையில் உள்ள விடுதி ஒன்றிக்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு …

Read More »

குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை – யாழில் கொடூரம்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜெகசீலன் சங்கீதா (வயது 44) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டின் கழிவ றைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் …

Read More »

குழந்தை பிரசவித்த சிறுமி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு …

Read More »

டயனாவுக்கு எதிராக மற்றுமொரு சட்ட நடவடிக்கை

டயனா கமகேவுக்கு இரட்டை குடியுரிமைக்கூட இல்லை, அவர் வெளிநாட்டு பெண், சட்டவிரோதமாகவே எம்.பி. பதவியை பெற்றுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டயனா கமகேவுக்கு இரட்டைக்குடியுரிமைக்கூட இல்லை, அவர் வெளிநாட்டு பெண் என்றே எமக்கு தெரியவருகின்றது. இதுவரைகாலமும் அவர் எம்.பி. பதவியை சட்டவிரோதமாகவே வகித்துள்ளார். 20 ஆவது திருத்தச்சட்டத்தை அவர் ஆதரித்தார், கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை …

Read More »

விஜித் குணசேகரவுக்கு விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று(9) முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்தார். சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் …

Read More »

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும், ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்றைய தினம் (09) வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை சில மாணவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து மற்றுமொரு தரப்பினருக்கு அனுப்பி அதற்குரிய விடைகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். …

Read More »